"விளையாட்டு வீரர்கள் எப்போதும் நல்ல மாணவர்களாக தான் இருப்பார்கள்" - கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் பேச்சு


விளையாட்டு வீரர்கள் எப்போதும் நல்ல மாணவர்களாக தான் இருப்பார்கள் - கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் பேச்சு
x

மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்சங்கர் பதிலளித்தார்.

மதுரை,

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கலந்து கொண்டார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்சங்கர் பதிலளித்தார்.

அப்போது தனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் விஜய் சேதுபதி என்று அவர் கூறினார். மேலும் தோனியை தனது ரோல் மாடலாக பின்பற்றுவதாக கூறிய அவர், விளையாட்டு வீரர்கள் எப்போதும் நல்ல மாணவர்களாக தான் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.


Next Story