மிளகாய் பொடியை தூவி கடைக்காரரிடம் நூதன முறையில் பணம் திருட்டு


மிளகாய் பொடியை தூவி கடைக்காரரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
x

மிளகாய் பொடியை தூவி நூதன முறையில் கடைக்காரரிடம் ரூ.44 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). மளிகை கடைகளுக்கு இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது ஆட்டோவில் சென்று மளிகை கடைகளுக்கு இனிப்பு வகைகளை வினியோகிப்பது வழக்கம்.இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள கடைக்கு பொருட்களை சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இளையராஜா மீது எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய மிளகாய் பொடியை தூவி உள்ளார். அந்த எரிச்சலில் இளையராஜா சற்று அசைந்து தனது கையிலிருந்த பணப்பையை ஆட்டோவில் வைத்துள்ளார்.

அந்த சமயம் அங்கே வந்த மற்றொரு நபர் அவரது கவனத்தை திசை திருப்பி கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.44 ஆயிரம் வைத்திருந்த கைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இளையராஜா மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மிளகாய் பொடியை தூவி நூதன முறையில் பணம் திருடிய சம்பவம் மணவாளநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story