பாறை மீது ஏறி நின்றுதிருநங்கை தற்கொலை மிரட்டல்


பாறை மீது ஏறி நின்றுதிருநங்கை தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 5:24 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பாறை மீது ஏறி நின்று திருநங்கை தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தேனி

தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே பாறை மீது ஒருவர் ஏறி நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 80 அடி உயர பாறை மீது திருநங்கை ஒருவர் நின்றார்.

அப்போது அவர் காமயகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் வந்து தனக்கு தாலி கட்டி அழைத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் பாறையில் இருந்து கீேழ குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாறையில் இருந்து கீழே இறங்க செய்தார். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வயிறு செட்டிபாளையத்தை சேர்ந்த திருநங்கையான மணீஸ் என்ற பிரின்சி (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story