"மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே நிர்ணயிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே நிர்ணயிக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
x

மாநில கல்வி கொள்கை தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதாக கூறும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழு குறித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார்.

மேலும் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை மாநில அரசே நிர்ணயிக்கும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுவதாகவும், ஒட்டுமொத்த கருத்துக்களையும் ஆவணமாக பதிவு செய்த பிறகு, அது குறித்து தெரிய வரும் என்று தெரிவித்தார்.


Next Story