மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி


மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
x

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

கரூர்

கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்யூச்சர் பாக்சிங் அகாடமி மூலம் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் தலைவர் பொன்பாஸ்கரன் அனுமதியுடன் மாநில அளவிலான குத்து சண்டை போட்டி நடத்தப்பட்டது. போட்டியை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். செயலாளர் விசா.சண்முகம், பொருளாளர் வீரப்பன், துணைத்தலைவர் அம்மையப்பன், இணைச்செயலாளர் ரமேஷ் மற்றும் பள்ளியின் தாளாளர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியை கரூர் மாவட்ட ப்யூச்சர் பாக்சிங் அகாடமியின் தலைவர் பிரபாகரன், செயலாளர் முத்துகுமார் மற்றும் பொருளாளர் வசந்தகுமார் ஆகியோர் போட்டியை நடத்தினர். போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை முதல்வர் கற்பகம், துணைமுதல்வர் மகேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.


Next Story