மாநில அளவிலான செஸ் போட்டி


மாநில அளவிலான செஸ் போட்டி
x

மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.

திருச்சி

மாநில அளவிலான செஸ் போட்டி திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்ட செஸ் சங்கம் மற்றும் செஸ் ஜோன் 360 இணைந்து நடத்தும் இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சென்னை, வேலூர், நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய போட்டிகளை, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகணேஷ், ஷகிலாபானு தொடங்கி வைத்தனர். 8, 10, 12, 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளிலும், ஓப்பன் பிரிவுகளிலும் போட்டிகள் நடக்கின்றன. ஓப்பன் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் அரசுப்பள்ளி சார்பில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகிறது.

5 சுற்றுகளின் முடிவில் ஓப்பன் பிரிவில் கோபிநாத் (திருச்சி), சசிவர்தன் (சென்னை), ஹாரிஸ் ஜெசூரன் (தூத்துக்குடி) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ளனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆண்கள் போட்டியில் பவித்ரனும், பெண்களில் விஷாலியும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீராம்சுந்தரும், கனிகாஸ்ரீயும், 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தினேஷ் மற்றும் ரித்திகாவும், 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தருண் மற்றும் லாஸ்யாவும், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தனின் மற்றும் சுபிக் ஷாவும் முன்னிலையில் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.


Next Story