மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்


மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
x

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய கடன் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் திட்டத்தை லாபகரமாக செயல்படுத்த இயலும் என்கிற இடங்களில் மட்டுமே திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று பதிவாளரால் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாறாக தற்போது அனைத்து சங்கங்களும் லாபம், நட்டம் பாராது ஏதாவது ஒரு பணியினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சங்கங்கள் கடும் நட்டத்தை சந்திக்க கூடிய நிலை ஏற்படுகிறது. சங்க நலனை கருதியும், சங்க வருவாய் அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் ஊதியம் பெற்றும் வரும் நிலையினை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கரூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் விவசாய கருவிகளை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்து விட்டு அலுவலக பணியாளர்கள் தொடர்விடுப்பு செல்லும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட தலைவர் செல்வரத்தினம், பொருளாளர் பிரபாகர், கவுரவ மாவட்ட தலைவர் குப்புசாமி மற்றும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story