வாடிப்பட்டி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு -பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு


வாடிப்பட்டி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு -பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
x

வாடிப்பட்டி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை, பணம் திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்

மதுரை

வாடிப்பட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை ராமராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி மனைவி மாசிலாமணி (வயது 80). கல்யாணி இறந்து விட்டார். இவர்களுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மாசிலாமணி திண்டுக்கல்லில் உள்ள தனது மகன் பாண்டியராஜன் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் ராமராஜபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக மாசிலாமணி வாடிப்பட்டி மாதா கோவில் வந்து தங்கினார். அப்போது உடன் தங்கியிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் அறிமுகமானார்.

அந்த பெண் நீரேத்தான் நாகம்மாள் கோவில் பூசாரி வீட்டிற்கு குறி கேட்க போவதாகவும் உடன் வரும்படியும் மாசிலாமணியை அழைத்தார். அவரும் உடன் சென்றார். நாகம்மாள் கோவில் அருகில் சென்றபோது தான் வைத்திருந்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாசிலாமணிக்கு அந்த பெண் கொடுத்தார். அதை குடித்த மாசிலாமணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரது கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்கசெயின், கால் பவுன் தங்க மூக்குத்தி, அவர் வைத்திருந்த 1½ பவுன் தங்க செயின், 4 கிராம் மோதிரம், 2½ பவுன் தங்கதோடு மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி கொண்டு அந்த பெண் மாயமானார். இதுகுறித்து மூதாட்டி மாசிலாமணி, வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்.


Next Story