நோயாளியின் உதவியாளரிடம் நகை, பணம் திருட்டு


நோயாளியின் உதவியாளரிடம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நோயாளியின் உதவியாளரிடம் நகை, பணம் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம்

விக்கிரவாண்டி

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கத்தை சேர்ந்தவர் பாவாடை (வயது 55) விவசாயி. இவரது மகள் விஜயகுமாரி(23) பிரசவத்துக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர். இவருக்கு உதவியாக அவரது அம்மா ராஜேஸ்வரி(52) என்பவர் உடன் இருந்தார். விஜயகுமாரி அவரது தாலி சங்கிலி, தோடு ஆகிய 1½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மணிபா்சில் வைத்து அதை கட்டைப்பையில் வைத்திருந்தாா். நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தாய், மகள் இருவரும் கட்டை பையை கட்டிலுக்கு கீழ் வைத்துவிட்டு வெளியே சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பையில் இருந்த மணிபர்சை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டான். திருடு போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பாவாடை கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story