படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - வைகோ


படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - வைகோ
x

படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி, தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் இன்று, ஜூன் 22 ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அரசாணை வெளியிடப் பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில், 'முழு மதுவிலக்கே நமது இலக்கு' என்ற நோக்குடன் தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story