சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை - அமைச்சர் தகவல்


சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை - அமைச்சர்  தகவல்
x

சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் பால் குறித்து அச்சப்பட தேவையில்லை. பால் விநியோகம் இல்லை என்றால் எங்களுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக சீர் செய்யப்படும் எனவும் சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்


Next Story