எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை நகராட்சி பகுதியில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களாக கீழக்கரையில் வெறி நாய்கள் தொல்லை அதிகரித்து மனிதர்களை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். சில நாட்களில் கீழக்கரையில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோரை வெறி நாய்கள் கடித்து கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசு மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து முறையாக மருத்துவர் மூலம் கருத்தடை ஊசி செலுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், கீழக்கரை நகராட்சி முன்பு கீழக்கரை பொதுமக்கள் சார்பில் நாய் பொம்மையை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து நகராட்சிக்குள் விடும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னாள் தலைவர் ஹமீது பைசல் தெரிவித்துள்ளனர்.


Next Story