தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்


தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 19 Sep 2023 10:30 PM GMT (Updated: 19 Sep 2023 10:30 PM GMT)

கோத்தகிரியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது சலீம் சங்கத்தின் கடந்த மாத செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாய பவுடர் வழங்க வேண்டும். கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தொல்லை அளித்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். கோத்தகிரியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆலோசகர் பிரவீன், இணை செயலாளர் வினோபா பாப் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் கண்மணி நன்றி கூறினார்.


Next Story