மின் கட்டணத்தை குறைக்க கோரிசிறு குறு தொழிற்சாலைகள்வேலை நிறுத்த போராட்டம்


மின் கட்டணத்தை குறைக்க கோரிசிறு குறு தொழிற்சாலைகள்வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2023 1:00 AM IST (Updated: 26 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு குறு தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகளில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ரூ.25 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாட்டில் செயல்படும் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் கார்மெண்ட் தொழிற்சாலைகள், பட்டு முறுக்காலைகள், பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. இவற்றில் நேற்று வழக்கமான உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த சிறு குறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1 லட்சத்து 15 ஆயிரம் நேரடி தொழிலாளர்கள் மற்றும் மறைமுக தொழிலாளர்கள் என 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை.

ரூ.25 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிப்பு

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

1 More update

Next Story