பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர கோரிபாலக்கோடு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்


பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர கோரிபாலக்கோடு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:00 AM IST (Updated: 5 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர கோரி பாலக்கோடு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர கோரி பாலக்கோடு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டா செல்லாது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1,500 பேருக்கு பாலக்கோடு அருகே கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கிய இடத்தை அளந்து தரவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று சில பெண்கள் பாலக்கோடு தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் குடி இருக்க இடமில்லை. வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. இதனால் அரசு சார்பில் வழங்கிய பட்டா இடத்தை அளந்து தருமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் அந்த பட்டா செல்லாது என பெண்களிடம் கூறினர்.

முற்றுகை போராட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இதுகுறித்து கிராமமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் அரசு வழங்கிய பட்டா ஆணைகளை கைகளில் ஏந்தி திடீரென தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் ராஜா பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அடுத்த மாதம் பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story