பாப்பிரெட்டிப்பட்டியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்


பாப்பிரெட்டிப்பட்டியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:00 AM IST (Updated: 5 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இயக்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். இதில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்., தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story