மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தீ பந்தம் ஏந்தி போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தீ பந்தம் ஏந்தி போராட்டம்
x

கிராமங்கள் இருளில் மூழ்கியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

எலச்சிப்பாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தீ பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொண்ணையார், ஆயித்தாகுட்டை, கரியாம்பாளையம், சத்யா நகர், யூனியன் ஆபீஸ் ஓலப்பாளையம், செட்டிகுட்டைமேடு, எலிமேடு, பழையகரியாம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி அளவில் மின்சாரம் தடைப்பட்டது. இரவு 10 மணி வரை மின்சாரம் கிடைக்காததால் இரவு நேரத்தில் கொசுக்கடியால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் கைக்குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் கொண்ணையார் கிராமம், சத்தியாநகர் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் கிட்டுசாமி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story