பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடைபெற்றது.

கரூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடக்கும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் சி.பி.எஸ். இயக்க தலைமையை அழைத்து பேச வலியுறுத்தியும், புகளூர், மண்மங்கலம் வட்ட கிளை சார்பாக புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் முருகையன், வட்ட பொருளாளர் இளவரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story