நன்றாக படிக்க கூறி தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை


நன்றாக படிக்க கூறி தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை
x

நன்றாக படிக்க கூறி தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

பெருந்துறை

காஞ்சிக்கோவிலைச் சேர்ந்தவர் தங்கமாதேஸ்வரன். இவருடைய மனைவி மேகலா. இவர்களுடைய மகன் மிதுமித்தின் (வயது 17). இவர் காஞ்சிக்கோவிலில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-1 வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்ததால், இனிமேலாவது நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்று கண்டித்ததாக தெரிகிறது. தன்னை தந்தை திட்டிவிட்டாரே என மிதுமித்தின் வருத்தம் அடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று மிதுமித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story