அவினாசி அருகே பொக்லைன் எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
அவினாசி அருகே பொக்லைன் எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
அவினாசி,
அவினாசி அருகே பொக்லைன் எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொக்லைன் மோதியது
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் கரையப்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மகன் உதயா (வயது20). இவர் அவினாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவனாசி - மேட்டுப்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் உதயா சென்றுகொண்டிருந்தார். அரசுப்பணியாளர் நகர் அருகே சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
கல்லூரி மாணவர் பலி
இதில் கீழே விழுந்த உதயாவுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொக்லைன் எந்திரம் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.