தனியார் பள்ளி பஸ் மோதி மாணவன் படுகாயம்
திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி மாணவன் படுகாயம் அடைந்தான்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் ராகவா(வயது 11). பழையவேங்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த இவன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மாணவன் மீது மோதியது. இதில் பஸ்சக்கரம் ஏறி இறங்கியதில் ராகவனின் கால் நசுங்கி வலி தாங்க முடியாமல் கத்தினான். உடனே அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முன்னதாக மாணவன் மீது தனியார் பள்ளி பஸ் மோதியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூா் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விபத்துக்கு காரணமான தனியார் பள்ளி பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். மேலும் இந்த விபத்து தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறார்.