திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. முதல் நாளில் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. முதல் நாளில் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது. இந்த கல்லூரியில் 3-வது ஆண்டாக இந்த சேர்க்கை நடந்தது. மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் 15 இடங்கள் அகில இந்திய மருத்துவ தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு அந்த இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தலைமை தாங்கினார். துணை டீன் அமுதா முன்னிலை வகித்தார்கள். மருத்துவ பேராசிரியர்கள் குழுவினர் பங்கேற்று கலந்தாய்வு செய்தனர். அதன்படி நேற்று 28 பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டனர். வருகிற 11-ந் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. தேசிய மருத்துவக்கவுன்சில் உத்தரவுப்படி அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் முதலாமாண்டு பாட வகுப்புகள் தொடங்க உள்ளது.