அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்சால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி


அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்சால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி
x

வாணியம்பாடி அருகே அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்சால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து திம்மாம்பேட்டை வழியாக கனகநாச்சி அம்மன் கோவில் வரையில் அரசு டவுன் பஸ் செல்கிறது. இந்த பஸ் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் தற்போது தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த வழியாக இந்த ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால், மாணவர்கள் தேர்வுக்கு குறித்த நேரத்தில் போக முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் இந்தவழியாக செல்லும் பொதுமக்களும், பக்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளும் இதர பள்ளி தேர்வுகளும் தற்போது நடைபெறும் நேரத்தில் இதுபோன்று பஸ் பழுடைவதால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மாணவர்களும், பொதுமக்களும் கலெக்டருக்கு கோரி மனு அனுப்பி உள்ளனர்.

1 More update

Next Story