கை ராட்டை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்


கை ராட்டை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் கை ராட்டை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. அந்த பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் காட்சிபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாதம் கைராட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி கூறும்போது, 'முன்பு பெரும்பாலான மக்கள் குடிசைத் தொழிலாக வருமானம் ஈட்டவும், வீட்டில் தங்களது துணிகளை நெய்து கொள்ளவும் கைராட்டை பயன்படுத்தி வந்தனர். நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருளின் முக்கியத்துவத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கமாகும்' என்றார். இந்த கை ராட்டை சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.



1 More update

Next Story