அமைச்சர்கள் பெரியகருப்பன், செந்தில் பாலாஜி ஆய்வு


அமைச்சர்கள் பெரியகருப்பன், செந்தில் பாலாஜி ஆய்வு
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:46 PM GMT)

அரசூர் ஊராட்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் செல்போன் மூலம் இயங்கும் வால்வுகளின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.

கோயம்புத்தூர்

சூலூர்

அரசூர் ஊராட்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் செல்போன் மூலம் இயங்கும் வால்வுகளின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.

அமைச்சர்கள் ஆய்வு

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அதில் உள்ள நீரின் அளவை கண்காணிக்கும் கருவி மற்றும் செல்போன் மூலம் இயங்கும் கேட் வால்வுகளை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஷ் அகமது, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ேமலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அமைப்பு மற்றும் செல்போன் மூலம் இயங்கும் கேட் வால்வுகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜிடம் தொலைநோக்கு பார்வையில் முன்மாதிரியாக ஊராட்சியில் செய்யப்பட்ட இந்த பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

நிதி வழங்கும் விழா

இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) கமலக்கண்ணன், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி மற்றும் சதீஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வநாயகி அன்பரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் ஏ.வி.அன்பரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிட்டாம்பாளையம் வி.எம்.சி சந்திரசேகர், பதுவம்பள்ளி சரவணன், இளைஞர் அணி ஏ.வி.சக்தி ஹரிஹரன் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது.


Next Story