சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரம்


சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:15 PM GMT (Updated: 6 Oct 2023 8:15 PM GMT)

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகனின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு தினமும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இந்தநிலையில் மருதமலையில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தது.

புதிய தார்சாலை

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் மினி பஸ்களில் சென்றனர். இதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மருதமலை அடிவார பகுதி வெறிச்சோடி கிடந்தது.

இதற்கிடையில் கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. மருதமலையில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் பழைய தார்சாலையை அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று மற்ற திருப்பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.


Next Story