தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன்


தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன்
x

தீவனப்புல் வளர்க்கவும்-புல்கறணைகள் வாங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பும் மற்றும் புல்கறணைகள் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினைப் பெற்று புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் ஆன்லைனில் http://application.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-276317, 9445029470 ஆகிய தொலைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story