விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்


விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மானிய விலையில் வழங்க ரூ.1 கோடியே 5 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மை பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை www.pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story