இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
உடுமலை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்
உடுமலை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்
உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாதான். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கை, கால்கள் செயலற்ற நிலையில் வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியின் மகள் முத்துலட்சுமி (வயது 22). இவருக்கும் உரல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டிலிருந்த முத்துலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி துடிதுடித்த முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து முத்துலட்சுமியின் பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.