குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறு
வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார பாலசுதர்சன் (வயது 45). வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் நூல் மில்லில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (34). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் குமார பாலசுதர்சன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கம் சாத்தப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது சாமுண்டீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
தற்கொலை
உடனே குமாரபாலசுதர்சன் கதவை உடைத்து உள்ளே சென்று சாமுண்டீஸ்வரியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சாமுண்டீஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.