இரு கிராமத்தினரிடையே திடீர் மோதல்


இரு கிராமத்தினரிடையே திடீர் மோதல்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக இரு கிராமத்தினரிடையே திடீர் மோதல்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஆயந்தூர் கிராமத்துக்கும், அதன் அருகே உள்ள ஆ.கூடலூர் கிராமத்துக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. 2 கிராம மக்களும் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், காணை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆ.கூடலூரை சேர்ந்த ஒருவரின் கார், ஆயந்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த ஆயந்தூரை சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்டதும், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் திரண்டு வந்ததால் மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story