பா.ஜ.க.வினர் திடீர் மறியல்; 44 பேர் கைது


பா.ஜ.க.வினர் திடீர் மறியல்; 44 பேர் கைது
x

திண்டிவனத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 44 பேரை போலீசார்கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் காந்திசிலை அருகில் உள்ள தனியார் மஹாலில் தேச பிரிவினையின் சோக வரலாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் விஷ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில் பா.ஜ.க. மற்றும் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கம் முடிவடைந்த நிலையில் சென்னையை அடுத்த பழவேரியில் தடையை மீறி தேசியகொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில செயலாளரும், விழுப்புரம் கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி செல்வம் கைது செய்யப்பட தகவல் தெரியவந்தது. இதை கண்டித்து மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் தேசியக்கொடியுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜேந்திரன் உள்பட 44 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story