தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்


தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்
x

கெங்கவல்லியில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவர், கடன் தொல்லையால் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது.

சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லியில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவர், கடன் தொல்லையால் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது.

தொழிலாளி சாவு

கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (வயது 42), விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சர்வேஸ் என்ற மகன் உள்ளான். இவன் வனிதா வேலைபார்க்கும் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வனிதா மகனுடன் வீட்டுக்கு திரும்பிய போது, ரத்த வெள்ளத்தில் சதீஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கழுத்து மற்றும் கை அறுக்கப்பட்ட நிலையில் கத்தி மட்டும் அருகில் கிடந்துள்ளது. இது குறித்து வனிதா கொடுத்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தை அறுத்து தற்கொலை

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதலில் யாரேனும் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கடன் தொல்லையால் சதீ்ஷ் கழுத்தை அறுத்து தானே தற்கொலை செய்து கொண்டது போலீசார்விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:-

சதீசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் குடிப்பதற்கு பணம் இல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். மொத்தமாக கடன் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆனதால், கடன் கொடுத்த அனைவரும் தினந்தோறும் சதீசிடம் பணம் கேட்டு வந்தனர்.

இதில் விரக்தி அடைந்த சதீஷ் தனக்கு சொந்தமான வீட்டை விற்று விட்டு கடனை அடைக்க வேண்டும் என்று தனது மனைவி வனிதாவிடம் கூறி வந்தார். வனிதாவும் அதே போல கடந்த 3 நாட்கள் முன்பு யார் யாருக்கு கடன் தர வேண்டும் என்றும் கணவரிடம் விவரம் கேட்டுஉள்ளார்.

பூச்சி மருந்து வாங்க சென்றார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனிதாவும், 3-ம் வகுப்பு படிக்கும் மகன் சர்வேசும் பள்ளிக்கு சென்று விட்டனர். அதன்பிறகு வீட்டில் தனியாக இருந்த சதீஷ் நாம் வீடு விற்கிறோம் என்பதால் உறவினர்களிடையே மதிப்பு மரியாதை குறையும் என்று சதீஷ் விரக்தியில் இருந்தார்.

இதனால் பூச்சி மருந்து குடித்து இறந்து விடலாம் என்று கெங்கவல்லி கடைவீதியில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருந்து தர மறுத்து உள்ளனர். இதனால் சமையலுக்கு அறுக்கும் கத்தியை புதுசாக வாங்கி உள்ளனர். பின்னர் மது அருந்தி விட்டு, வீட்டில் அமர்ந்து முதலில் கையை வெட்டிக் கொண்டு அதன் பிறகு கழுத்தை வெட்டிக் கொண்டு அவர் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சதீசின் உடல் நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.


Next Story