கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருக்கோவிலூர் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வேல்மாறன் கண்டன உரையாற்றினார். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தரவேண்டி நிலுவைத்தொகையை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு வெட்டும் கூலியை சர்க்கரை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் தங்களது கைகளில் கரும்புகளை வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story