மாணவி தற்கொலை


மாணவி தற்கொலை
x

மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் கலைவாணி (வயது 21). கலைவாணி கழனிவாசல் வாரச்சந்தை அருகே உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி காரைக்குடியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது படிப்பிற்காக அவரது அப்பாவிடம் அடிக்கடி பணம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பாவுக்கு அதிக சிரமத்தை கொடுக்கிறோம் என்று நினைத்த கலைவாணி அவரது அத்தை வீட்டிற்கு சென்ற போது விஷம் தின்று தற்கொைல செய்துகொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story