100 டிகிரியை தொட்ட வெயில்


100 டிகிரியை தொட்ட வெயில்
x

நாமக்கல்லில் 100 டிகிரியை வெயில் தொட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் சாலையோரம் உள்ள குளிர்பான கடைகள், இளநீர், நுங்கு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குடைபிடித்தபடி செல்வதை பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தொப்பி அணிந்து செல்வதை காண முடிந்தது. இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story