தாம்பரம்-நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தாம்பரம்-நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரம்-நெல்லை மற்றும் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
* தாம்பரம்-நெல்லை இடையே (வ.எண்: 06021) இரவு 9 மணிக்கு ஏப்ரல் 27-ந் தேதி மே மாதம் 4,11,18 மற்றும் 25-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.
* நெல்லை-சென்னை எழும்பூர் இடையே (வ.எண்:06022) மதியம் 1 மணிக்கு ஏப்ரல் 28-ந்தேதி மே மாதம்5,12,19,26-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story