பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கோவை இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கோவை இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்
x

பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தாம்பரம்-கோவை மற்றும் திருச்சி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தாம்பரம்-கோவை மற்றும் திருச்சி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவையிலிருந்து வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06086) மறுநாள் காலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06085) மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல, பெங்களூருவில் இருந்து இன்று (12-ந்தேதி) மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06577) இரவு 11.30 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்சியிலிருந்து நாளை (13-ந்தேதி) காலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06578) மதியம் 12 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story