விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
விராலிமலை ஒன்றியம், ஆம்பூர்பட்டி அவ்வையார்பட்டி பகுதிகளில் வேளாண்மை வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் நில நீர் திடல் மேம்பாட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர்பட்டி, அவ்வையார்பட்டி விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செயல் விளக்க நிகழ்ச்சி மற்றும் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சித்தாம்பூர் விலக்கு ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நில நீர் திடல் மேம்பாட்டு திட்ட பணி மேலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். திட்ட வேளாண் அலுவலர் மகேஷ்வரி வரவேற்றார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாவட்ட மேலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் விதை நேர்த்தி பற்றிய செயல் விளக்கம் மற்றும் அதன் பயன்கள் குறித்து வேளாண் வல்லுனர் சிவபாலன் தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில் 80 விவசாயிகளுக்கு சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா உயிர் எதிர் கொல்லிகள், 20 விவசாயிகளுக்கு அசோலா பெட், 14 சுய உதவிக் குழுக்களுக்கு பேட்டரி மூலம் இயங்கும் ஸ்பிரேயர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பகுதி திட்ட களப் பணியாளர்கள் மல்லிகா, அஜந்தா ஆகியோர் செய்திருந்தனர்.