இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு... ஐமுமுக கூட்டத்தில் ஒருமித்த முடிவு
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஈரோடு,
ஈரோடு இடைத்தேர்தலை திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் ஹைதர் அலி, ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Related Tags :
Next Story