அ.ம.மு.க.வுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.ம.மு.க.வுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அ.ம.மு.க.வுடன் இணைந்துc நடத்தினர்.

ராணிப்பேட்டை

அ.ம.மு.க.வுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர் முரளி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் கழக மற்றும் அ.ம.மு.க.நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விசாரணை குறித்து ஏன் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன், பொற்கொடி, நகர செயலாளர்கள் தனசேகர், நித்தியானந்தம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


Next Story