கணக்கெடுப்பு பயிற்சி முகாம்


கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தமிழக அரசின் அனைவருக்கும் வீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பயிற்சி முகாம் தியாகதுருகம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேலு, பொறியாளர் தயாபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில் உதவி திட்ட அலுவலர் சீனிவாசன் கலந்துகொண்டு தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் முறையான கணக்கெடுப்பு நடத்துதல், ஓட்டு வீடு, குடிசை வீடு, மெத்தை வீடு என எந்தெந்த வகையான வீடுகள், வீடு இல்லாத நபர்கள் உள்ளிட்ட விபரங்களை கணக்கெடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமாக கூறினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story