தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்


தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
x

தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தினர் மகளிர் தையல் கூட்டுறவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிச்சைக்கனி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது அரசு உதவி பெறும் பள்ளி ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை வருடம்தோறும் 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். உறுப்பினர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

1 More update

Next Story