தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில்
பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06012) அடுத்தநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோல, மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் அதே சிறப்பு ரெயில் (06011) அதேநாள் இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.
Related Tags :
Next Story