ஜூன் 27-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம், பருவமழை முன்னெச்சரிக்கை, புதிய திட்டங்களுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்பிக்க உள்ள நிலையில், புதிய சட்ட மசோதா சீர்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.
மேலும் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 5-ல் அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் தற்போது ஜூன் 27-ல் அமைச்சரவை கூடுகிறது.