தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்


தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
x
தினத்தந்தி 26 April 2023 8:29 AM IST (Updated: 26 April 2023 8:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. எனவே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு கவர்னர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் தான் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் அமைய இருக்கிறது.


Next Story