சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு...!


சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு...!
x

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

சென்னை,

காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை எம்.ஆர்.சி. நகரில் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெற உள்ளது.


Next Story