மும்பை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மும்பை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 31 Aug 2023 9:45 AM IST (Updated: 31 Aug 2023 11:17 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை,

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில்,

கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் மும்பை சென்றுள்ளார். மேலும், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.

மும்பையில் இன்று தொடங்க உள்ள 3வது கூட்டத்தில் புதிதாக 2 கட்சிகள் இணைந்துள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக உள்பட சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால், பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இன்று தொடங்க உள்ள 3வது ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story