இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்


இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்
x

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றனர்.

சென்னை

தமிழ்நாடு மீனவர்கள் கடலில் படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருக்கும்போது எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் மீன்கள், வலைகள், படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.

அதன்பிறகு மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுவித்து, அதன்பேரில் இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேசி கோர்ட்டு மூலம் தமிழக மீனவர்கள் மீட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் விடுதலையாகி மீட்கப்பட்டாலும், அவர்களின் படகுகள் இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகள் விவகாரத்தில் இலங்கை கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ஜேசுராஜா தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 பேரும் என 10 மீனவர்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் இலங்கை யாழ்ப்பாணம் நகருக்கு புறப்பட்டு சென்றனர்.

இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வர இருப்பதாகவும், அந்த விசாரணையில் தமிழ்நாடு மீனவர்கள் ஆஜராகி தங்களுடைய 17 படகுகளையும் விடுவித்து தங்களிடம் ஒப்படைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்வதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story