தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

எண்ணிலடங்கா நேரடி ஆய்வு கூட்டம் மற்றும் காணொலி ஆய்வு கூட்டம், விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரத்திற்கு பின்பு, இரவு நேரத்திலும் தொடரும் ஆய்வு கூட்டம் நடத்துவது. காலிப்பணியிடங்களை நிரப்ப மறுப்பது, கணினி மயமாக்கப்பட்டதால் பணியிடங்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமோதரன், முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட பொருளாளர் பொன்ராம் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story